பொன்னேரியில் லெமன் ஜூஸ் குடித்த 13 பேர் மருத்துவமனையில் அனுமதி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கெட்டுப்போன இறைச்சி உண்ட பலர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது தொடர் கதையாகி வருகிறது. நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட சிறுமி உயிர் இழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து விதமான உணவகங்களிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் தமிழக முழுவதும் 1187 உணவகங்களில் கடந்த 19ஆம் தேதி முதல் நடைபெற்ற உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனையில் 1024 கிலோ அளவிலான கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 115 உணவகங்களிடமிருந்து மொத்தமாக ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே எலுமிச்சை பழச்சாற்றில் சிலிக்கான் ஜெல் ஐஸ் கலந்து குடித்த 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. உடலில் ஏற்படும் வீக்கத்திற்கு ஒத்தடம் கொடுக்க பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டியை பழச்சாற்றில் கலந்து குடித்த 13 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13 people admitted to hospital after drinking lemon juice in Ponneri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->