VHP முன்னாள் தலைவர் ஆர்.பி.வி.எஸ் மணியனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்! நீதிபதி அல்லி அதிரடி உத்தரவு
14 days court custody for spiritual speaker RBVS Maniyan
ஆன்மீக சொற்பொழிவாளரும் விஷ்வ இந்து பரிக்ஷத் இயக்கத்தின் முன்னாள் தலைவருமான ஆர்.பி.வி.எஸ் மணியன் சென்னையில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது அம்பேத்கர், திருவள்ளுவர், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர் குறித்து இழிவான வகையில் அவதூறாக பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சை கிளப்பியது.
இந்த வீடியோ தொடர்பாக சென்னை காவல் துறையினரிடம் பல்வேறு புகார்கள் குவிந்தன. அதன் அடிப்படையில் இன்று அதிகாலை 3:30 மணி அளவில் சென்னை தியாகராய நகரில் உள்ள ஆர்.பி.வி.எஸ் மணியன் வீட்டில் வைத்து அவரை கைது செய்தனர்.
அதன் பிறகு ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியின் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விஷ்வ ஹிந்து பரிக்ஷத் முன்னாள் துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ் மணியனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார்.
அப்போது மணியன் தனக்கு சிறுநீரக தொற்று மற்றும் சர்க்கரை வியாதி உள்ளதால் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என மணியன் வைத்தார். அதற்கு நீதிபதி அல்லி கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
English Summary
14 days court custody for spiritual speaker RBVS Maniyan