#Breaking :: தமிழகம் முழுவதும் 14 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்!
14 DSP transferred across Tamil Nadu
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்த டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
1) தேனி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பிரபாகரன் கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2) தேனி மாவட்டத்தில் பயிற்சியில் இருந்த ராஜேஸ்வரன் நெல்லை ஜங்ஷன் சரக உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3) காத்திருப்போர் பட்டியல் இருந்த வினோஜி விருதுநகர் மாவட்ட சாத்தூர் சப் டிவிஷன் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
4) திருவண்ணாமலை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பி ராஜேஷ் கள்ளக்குறிச்சி சப் டிவிஷன் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
5) மதுரை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ரவிக்குமார் கோவை மாநகர ஆர்.எஸ் புரம் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
6) திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஈஸ்வரன் திருப்பூர் மாநகர் உளவுத்துறை உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7) காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிஎஸ்பி பிரகாஷ் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
8) சென்னை மாநகர் உளவுத்துறை உதவி ஆணையாளர் மணிமேகலை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
9) திருச்சி மாநகர் குற்ற ஆவண காப்பக உதவி ஆணையாளர் கென்னடி திருச்சி கண்டோமென்ட் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
10) திருச்சி மாநகர் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் பாரதிதாசன் திருச்சி மாவட்ட ஜீயர்புறம் சரக்கு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
11) காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பி சகாயஜோஸ் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சரக டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
12) கோவை மாநகர் உளவுத்துறை உதவி கமிஷனர் பார்த்திபன் கோவை மாவட்ட சிங்காநல்லூர் சரகர் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
13) ஈரோடு அதிரடிப்படை டிஎஸ்பி சுகுமார் கோவை மாநகர சிறப்பு புலனாய்வு பிரிவு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
14) ஆலங்குளம் சரக டிஎஸ்பி பொன்னரசு தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
English Summary
14 DSP transferred across Tamil Nadu