தொடரும் அட்டூழியம்: மீண்டும் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!
14 Tamil Nadu fishermen arrested for atrocity |
மீண்டும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.மேலும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டும் மற்றும் நீதி மன்ற காவலிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் அதேபோல் மீனவர்களுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளும் இலங்கை வசம் உள்ளது.
மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்கள், சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர், மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சமீபத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் மீண்டும் இலங்கை கடற்படையினர் கைதுசெய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்துவருகிறது.மீண்டும் , எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பாம்பன் மீனவர்கள் 14 பேரை கைது இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை மன்னார் தெற்கு கடற்பரப்பில் மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனர்.
முதல்கட்ட விசாரணைக்கு பின் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட உள்ளனர் என்றும் அவர்கள் 14 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
14 Tamil Nadu fishermen arrested for atrocity |