இந்த மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜை ஜெயந்தி விழாவை முன்னிட்டு, இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன்  144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை அக்டோபர் 31-ம் தேதியும் மற்றும் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் குருபூஜை செப்டம்பர் 11-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த முக்கிய தினங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்துவார்கள்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இரண்டு மாதத்திற்கு புதிய சட்டப்பிரிவு 163(1)-ன் படி, அதாவது  144 தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவானது இன்று முதல் வரும் அக்டோபர்  31-ம் தேதி வரை நடைமுறைக்கு வருவதால்,  வெளி மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் உரிய அனுமதியில்லாமல் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த ஊரடங்கு அறிவிப்பின் படி, 5 நபர்களுக்கு மேல் கூடி நின்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

144 ban for 2 months in this district collectors order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->