டாஸ்மாக் பார் வந்தால் நானே அடித்து உடைப்பேன்.!! 15 வயது சிறுவன் ஆவேசம்.!! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த மதுரவாயல் பகுதியில் புதிதாக திறக்க இருக்கும் டாஸ்மாக் கடையை தடை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் மது கடையால் தங்கள் பகுதியில் உள்ள இளைஞர்கள் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் இருப்பதாக குற்றம் சாட்டினர்.

மேலும் டாஸ்மாக் கடை அப்பகுதியில் வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவும், ஏற்கனவே அப்பகுதி இளைஞர்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. மேலும் டாஸ்மாக் கடை வருவதால் தான் குற்ற செயல்கள் அதிகரிக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

படிக்கும் இளைஞர்களும், வேலைக்கு செல்லும் இளைஞர்களும் டாஸ்மாக் கடையினால் சீரழிகின்றனர் என தெரிவித்தனர். அப்போது அவர்களுடன் வந்திருந்த 15 வயது சிறுவன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது "ஏற்கனவே எங்கள் தெருவில் என்னுடன் நன்றாக பேசிய அண்ணன்கள் இருவர் டாஸ்மாக் கடையில் தினமும் குடித்ததால் உயிரிழந்து விட்டனர். 

எங்கள் தெருவில் டாஸ்மாக் பார் திறக்கப்பட்டால் அனைவரும் அங்கே தான் செல்வார்கள். டாஸ்மாக் பாரில் தான் விழுந்து கிடப்பார்கள், வீட்டுக்கு செல்ல மாட்டார்கள். நான் தமிழக முதல்வருக்கு வைக்கும் ஒரே கோரிக்கை அந்த இடத்தில் டாஸ்மாக் பார் வரக்கூடாது. அந்த இடத்தில் டாஸ்மாக் பார் வந்தால் சாலை மறியல் நடக்கும், அந்த டாஸ்மாக் பாரை நானே அடித்து உடைப்பேன்" என ஆவேசமாக பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15year oldboy said that if Tasmac shop comes near my house i will break it


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->