உணவு பொருட்களில் இடம்பெறும் 16 விவரங்கள் : நிறுவனத்திற்கு ரூ.2 லட்சம் அபராதம்.!
16 details in food products
பெரும்பாலான நிறுவனங்கள் உணவுப்பொருட்களை பாக்கெட்டில் அடைக்கும் போது, லேபிள் ஓட்டுவதில் தயாரிப்பு தேதி மற்றும் முடிவடையும் தேதி என்று எதையும் குறிப்பிடுவதில்லை.
அதில், சைவ மற்றும் அசைவ குறியீடும் இடம்பெறுவதில்லை. இதனால், நுகர்வோருக்கு எத்தனை நாட்கள் வரை உணவை பயன்படுத்த முடியும் என்று தெரிவதில்லை. காலாவதியான பொருட்களை பயன்படுத்தும் போது வாந்தி, பேதி, காய்ச்சல் உட்பட உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
இதுகுறித்து உணவுப்பொருள் மற்றும் தின்பண்ட தயாரிப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உணவு பாக்கெட்டில் ஒட்டப்படும் லேபிளில் 16 வகையான விவரங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த லேபிளில் உற்பத்தி, காலாவதி தேதி, சத்துக்கள் விவரம், முகவரி, தரச்சான்றிதழ் எண், இறக்குமதி செய்த உணவின் உற்பத்தி நாடு என்று 16 விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராம பாண்டியன் தெரிவித்ததாவது: அரைகுறை தகவல்கள் உள்ள லேபிளை சரிசெய்து முழுமையான தகவல்களை தர வேண்டியது உணவு தயாரிப்பாளர்களின் தலையாய கடமை.
பொருட்களை வாங்கும் போது நுகர்வோரும் உற்பத்தி, காலாவதி தேதி, முகவரி உள்பட அனைத்து விபரங்களும் சரியாக உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். முழு தகவல் இல்லாதபட்சத்தில் மாவட்ட வருவாய் அலுவலக நீதிமன்றம் மூலம் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்து ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
இதுகுறித்து செப்.23 மற்றும் 24ல் மதுரை உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தில் லேபிள் மேளா நடத்தப்படுகிறது. மேலும், லேபிளில் முழுமையான தகவல்கள் இல்லாவிட்டால் நுகர்வோர் 94440 42322க்கு வாட்ஸ்ஆப் புகார் தெரிவிக்கலாம்.
English Summary
16 details in food products