பரபரப்பு.. சென்னையில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட 16 பேர் மருத்துவமனையில் அனுமதி.!!
16 peoples admitted hospital in chennai for eat chicken and shawarma
சென்னையில் உள்ள அண்ணா சாலை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ஒரே ஓட்டலில் இரண்டு கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கடந்த 30-ந்தேதியன்று பிரியாணி வாங்கி சாப்பிட்ட 8 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது இரண்டு பேர் மயக்கம் ஏற்பட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 6 பேர் காலரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று திருவல்லிக்கேணி ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. அவர்கள் 8 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
16 peoples admitted hospital in chennai for eat chicken and shawarma