வழிப்பறியில் ஈடுபட்ட 16 வயது சிறுவன்! நூதன முறையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி! - Seithipunal
Seithipunal


திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட 16 வயது சிறுவனுக்கு தினமும் 8 மணி நேரம் போக்குவரத்து காவலருடன் இணைந்து போக்குவரத்தை சீர் செய்யும் தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவர் கோவை மாவட்டம் துடியலூரில் கடந்த ஜூலை 12ஆம் தேதி  அவ்வழியாக  வந்த ஒருவரிடம் வழிபறியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக கோவை போலீசார் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். பின்னர் சிறுவனை கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி  சிறுவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு  நூதன முறையில் தீர்ப்பு வழங்கினார். நீதிபதி வழங்கிய தீர்ப்பு ஆனது, சிறுவன்  அடுத்து வரும் 15 நாட்களுக்கு தினமும் 8 மணி நேரம் திருச்சி மாநகர போக்குவரத்து காவல் துறைக்கு உதவி புரிய நீதிபதி உத்தரவு பெற்றுள்ளார்.

அதனையடுத்து அந்த சிறுவனை போலீசார் கமிஷனர் முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையில் சிறுவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இனிமேல் எந்த குற்ற செயலிலும் ஈடுபடக் கூடாது என்ன எச்சரித்தார்.

பின்னன் சிறுவர் நீதிபதி வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், 15 நாட்களுக்கு தினமும் 8 மணி நேரம் ஸ்ரீரங்கம்போக்குவரத்து போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை சீர் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இந்தநிலையில் இன்று காலை 9 மணி ஸ்ரீரங்கம் மாம்பழ சாலை சிக்னல் பகுதியில் போக்குவரத்து போலீசார் உதவி உடன் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் அதிபர் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 year old boy who was involved in highway robbery was sentenced to 8 hours daily with a traffic policeman to manage the traffic


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->