சர்ச்சைக்குரிய கலாஷேத்ரா பாலியல் புகார்... 162 மாணவிகளுக்கு சம்மன்..!!
162 female students summoned in Kalashetra sex case
கடந்த மார்ச் மாதம் அடையாறு கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. மாணவிகள் பலர் அளித்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் சில ஊழியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், சாதி ரீதியாக பாகுபாடு பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் மாநில மகளிர் ஆணையமும் தலையிட்டு விசாரணை நடத்தியது. அவ்வாறு மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்திய பொழுது 100க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்திருந்தனர். நேரடியாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் மாநில மகளிர் ஆணையத்தில் புகார்கள் குவிந்தன.
இந்த புகார்கள் மீது சென்னை காவல் துறைக்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் மாணவிகளின் விவரங்களை பெற்று சம்மன் அனுப்பி உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது..
அதன் அடிப்படையில் முதற்கட்டமாக 15 மாணவிகளுக்கு சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் எவ்வாறு பாலியல் தொந்தரவு நிகழ்ந்தது என்ற அடிப்படையில் மாணவிகள் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசாரின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையினர் முன்பு விசாரணைக்கு ஆஜரான மாணவிகள் எந்த விதமான பாதிப்புகளும் உள்ளாகவில்லை எனவும், எங்களது ஆசிரியர்கள் மீது அன்பும், மரியாதையும் உள்ளது எனவும் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. சில மாணவிகள் எங்களுக்கும், இந்த புகாருக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளனர்.
English Summary
162 female students summoned in Kalashetra sex case