DPI வளாகத்தில் பரபரப்பு! 170 பேரின் நிலை சீரியஸ்? முதல்வருக்கு பறந்த அவசர கோரிக்கை! - Seithipunal
Seithipunal


சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் இன்றுடன் 6வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருவதால் பள்ளிக்கல்வித்துறை தலைமை அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுமார் 170-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவசர உதவிக்காக பள்ளிக்கல்வித்துறை தலைமை அலுவலக வளாகத்தில் தற்காலிக மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோன்று அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் 9வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களோடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

பல ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஆசிரியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் சங்கப் போராட்டத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலையிட்டு விரைவில் தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

170 teachers suffered health problems in 6thday hunger strike


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->