#BREAKING || கூடங்குளம் போராட்ட வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
18 people 7years imprisonment in Kudankulam protest case
கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்பு போராட்டம் தொடர்பான வழக்கில் 18 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!!
தூத்துக்குடி மாவட்டம் கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பல்லாயிரம் கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள மறுத்த 2 மீனவர்களை கொலை செய்யும் நோக்கில் அறிவாளால் வெட்ட முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்டம் வள்ளியூர் சார்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி போராட்டத்தில் ஈடுபடும் மறுத்த 2 மீனவர்களை கொல்ல முயன்ற வழக்கில் 18 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், புஷ்பராயன், ஜேசுராஜ் ஆகியோர் விடுதலை செய்து வள்ளியூர் சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
18 people 7years imprisonment in Kudankulam protest case