மது குடிக்க பணம் தர மறுத்த இளைஞர்.! சரமாரியாக தாக்கிய 2 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கோவையில் மது குடிக்க பணம் தர மறுத்த இளைஞரை தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே உள்ள கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(21). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று சுண்டகாக்காமுத்துரை சேர்ந்த தனது நண்பரின் சகோதரி நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

பின்பு தனது நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்துவதற்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்பொழுது திருமூர்த்தி நகரை சேர்ந்த இளவரசன் (20) மற்றும் விஷ்ணு (20) ஆகியோர் சக்திவேலிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர்.

ஆனால் சக்திவேல் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் தகாத வார்த்தையால் திட்டி சக்திவேலை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சக்திவேலை தாக்கிய இளவரசன் மற்றும் விஷ்ணு ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 arrested for assaulting a youth who refused to pay for drinking alcohol in kovai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->