கே.ஜி.எப் திரைப்பட பாணியில் பிரபல ரவுடியை பீர்பாட்டலால் தாக்கிய 2 சிறுவர்கள்! - Seithipunal
Seithipunal


சென்னை புளியந்தோப்பு பகுதியில் பிரபல ரவுடியை இரண்டு சிறுவர்கள் பீர்பட்டலால் தாக்கிய சம்பவத்தை எடுத்து இரண்டு சிறுவர்களையும் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித். இவன் தற்போது மெட்ரோ ரயில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பகுதியில் தன்னை ஒரு பெரிய ரவுடி என பாதித்துக்கொண்டு இளைஞர்களிடம் அட்டகாசம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர் மீது புளியந்தோப்பு பேஷன் பிரிச்சு உள்ளிட்ட காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் திருமணம் ஆகி பிரியா என்ற மனைவியும் மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இதநிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து புழிந்தோப்பு கன்னிகாபுரம் கஸ்தூரிபாய் காலனி வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போதான் வழியாக வந்த இரண்டு சிறுவர்கள் மதுபோதையில் அஜித்திடும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

அஜித்துக்கும் இரண்டு சிறுவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கைகளைப்பாக மாறி இரண்டு சிறுவர்கள் அஜித்தை பீர் பாட்டலால் ஓங்கி தலையில் அடித்துள்ளனர். இதனால் தலையில் பலத்த காயமடைந்த அஜித் வலியால் அழுததை கண்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து புளியந்தோப்பு கன்னிகா புறத்தை சேர்ந்த நிரஞ்சன் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 boys arrested for attacking famous rowdy with beer bottles


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->