சென்னையில் பிரபல 2 தியேட்டர்களுக்கு சீல்!
2 famous theaters in Chennai sealed
சென்னை நங்கநல்லூரில் ரூ.60 லட்சம் சொத்து வரி தொகையை செலுத்தாமல் செயல்பட்டு வந்த வெற்றிவேல் மற்றும் வேலன் தியேட்டர்களுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
சென்னை நங்கநல்லூரில் செயல்பட்டு வந்த வெற்றிவேல் மற்றும் வேலன் திரையரங்குகளின் உரிமையாளர்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.60 லட்சம் சொத்து வரி தொகையை செலுத்தாமல், கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் திரையரங்கிற்கு நோட்டீஸ் வழங்கியும், பலமுறை நேரில் சென்று கூறியும் வரி செலுத்தாததால் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று வெற்றிவேல் மற்றும் வேலன் ஆகிய இரண்டு தியேட்டர்களுக்கு சென்ற சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல அதிகாரிகள், அங்கிருந்த ஆட்களை வெளியேற்றினர்.
அது மட்டுமல்லாமல் மின்சார இணைப்புகளைத் துண்டித்த அதிகாரிகள், இரண்டு தியேட்டர்களின் முகப்புகளுக்கும் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
English Summary
2 famous theaters in Chennai sealed