தஞ்சாவூர் அருகே பரபரப்பு.! விவசாயியை தாக்கி அறிவாளால் வெட்டிய 2 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்விரோதத்தில் விவசாயியை தாக்கி அறிவாளால் வெட்டிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் தத்துவம் சேரி பகுதியை சேர்ந்தவர் விவசாயி அக்பர் அலி (50). இவரது தம்பிக்கும் அதே பகுதியை சேர்ந்த லோகப்பனுக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அக்பர் அலி விளைச்சல் நிலத்திற்குச் சென்றபோது, லோகப்பன், அவரது மகன் அரவிந்த் மற்றும் தம்பி மகன் ஆனந்தராஜ் ஆகியவர் அக்பர் அலியிடம் முன் விரோதம் தொடர்பாக தகராறு செய்துள்ளனர்.

இதில் தகராறு முற்றிய நிலையில் அக்பர்ளியே அவர்கள் அனைவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். மேலும் அக்பர் அலியை ஆனந்தராஜ் அறிவாளால் வெட்டியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அக்பர் அலியை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆனந்தராஜ் மற்றும் அரவிந்த் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான லோகப்பனை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 people arrested for attacking the farmer and cutting him with a sickle in Thanjavur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->