கோவை : வால்பாறையில் சோகம் - நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு.. !! - Seithipunal
Seithipunal



கோவை மாவட்டம் வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள மின் கம்பங்கள், மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் வால்பாறை பகுதி முழுவதும் மின்தடை நிலவி வருகிறது. 

நேற்று (ஜூலை 29) காலை முதலே வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று காலை வால்பாறையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை ஏற்பட்ட இந்த மண் சரிவில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து, அந்த மண் சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 

முன்னதாக இன்று (ஜூலை 30) காலை தான் அங்கு பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தான் பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் இருந்து சோலையார் அணை இடது கரை செல்லும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி என்பவரும், அவரது பேத்தி தனப்ரியா என்பவரும் இன்று காலை மண் சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 

இதையடுத்து இன்று காலை அவ்வழியாக வேலைக்குச் சென்றவர்கள் வீடு இடிந்து கிடந்ததை பார்த்துவிட்டு, இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அங்கு சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

முன்னதாக இன்று அதிகாலை கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து வால்பாறையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 Peoples Died in Landslide in valparai District


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->