ஆத்தூர் கிளை சிறையில் 2 போலீஸ் அதிரடியாக சஸ்பெண்ட்!
2 police officers suspended in attur branch jail
சேலம் மாவட்டம், ஆத்தூர் கிளை சிறையில் கண்காணிப்பு பணியின் கவன குறைவாக இருந்த காவலர்கள் இரண்டு பேரை, சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை கண்காணிப்பாளர் வினோத் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் கிளை சிறையில் இரண்டு பேர் காவலர்களாக பணியாற்றி வந்து உள்ளனர். இந்த நிலையில், இவர்கள் இரண்டு பேரும் கண்காணிப்பு பணியின் கவன குறைவாக இருந்து உள்ளனர். இதையடுத்து, அந்த 2 காவலர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், காவலர்கள் செந்தில்குமார், ராஜவர்மனை ஆகிய இருவரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை கண்காணிப்பாளர் வினோத் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
கண்காணிப்பு பணியின் கவன குறைவாக இருந்த காவலர்கள் இரண்டு பேரை, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது என்று சமூக வலைத் தளங்களில் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில், 11 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
2 police officers suspended in attur branch jail