ஓட்டல் ஊழியர் படுகொலை..! பீர் பாட்டிலுக்காக நடந்த கொடூரம்..! சிக்கிய 2 வாலிபர்கள்...!
2 youths arrested for Murdering hotel worker in namakkal
நாமக்கல் மாவட்டத்தில் பீர் பாட்டிலுக்காக ஓட்டல் ஊழியரை கொடூரமாக வாலிபர்கள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (40). இவர் நாமக்கல்லில் தங்கி ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பீர் பாட்டிலுடன் திருச்செங்கோடு சாலையில் நின்று கொண்டிருந்த கண்ணன், அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடம் லிப்ட் கேட்டுள்ளார்.
இதையடுத்து அவர்கள் கண்ணனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து நல்லிப்பாளையம் அருகே சென்ற போது, கண்ணன் வைத்திருந்த பீர் பாட்டிலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் பிடுங்கி உள்ளார். இதையடுத்து கண்ணன் பீர் பாட்டிலை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பீர் பாட்டிலை தர மறுத்ததால் இது தொடர்பாக இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த இருவரும் கண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் கண்ணனை மறைவான பகுதிக்கு தூக்கி சென்று கல்லால் அவரை முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த நாமக்கல் போலீசார், கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கண்ணனை கொலை செய்தது ராமாவரம் புதூர் பகுதியை சேர்ந்த சக்திவேல்(23) மற்றும் சேத்தமங்கலம் ரோடு குடிசை மாற்று வாரியத்தை சேர்ந்த கௌதம்(28) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
2 youths arrested for Murdering hotel worker in namakkal