தென்காசியில் அதிர்ச்சி.. ஆட்டோவில் கடத்தி சிறுமி கூட்டு பலாத்காரம்.! நள்ளிரவில் துணிகரம்.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் இரவில் சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

தென்காசி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் நேற்று முன்தின இரவு செங்கோட்டையில் உள்ள செல்போன் கடை ஒன்றில் தனது செல்போனை பழுது பார்ப்பதற்காக கொடுத்துவிட்டு, அப்பகுதியில் தனியாக நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வந்த 3 வாலிபர்கள் சிறுமியை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

சிறுமிக்கு அந்த வாலிபர்கள் தெரிந்தவர்கள் என்பதால் அவர்களுடன் நம்பி ஆட்டோவில் சென்றுள்ளார். ஆனால் சிறிது தூரம் சென்றதும், சிறுமியின் வாயை பொத்தி அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளனர். பின்பு வாங்கு வைத்து சிறுமியை மூன்று பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதையடுத்து சிறுமியை அதிகாலை ஆட்டோவில் கொண்டு வந்து மீண்டும் ஊருக்குள் விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். அப்பொழுது ரோந்து வந்த போலீசார் சிறுமி தனியாக நிற்பதை பார்த்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்பொழுது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி போலீசாரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் போலீசார், சிறுமி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் விசாரணையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது ஆட்டோ டிரைவரான மாதவன் மற்றும் அவரது நண்பர்களான வெங்கடேஷ், அந்தோணி என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் அந்தோணி மற்றும் மாதவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் தலைமுறைவாக உள்ள வெங்கடேசை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 youths arrested for The girl was abducted in an auto and gang raped in thenkasi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->