#தேனி || கம்பத்தில் 144 தடை மீறிய 20 பேர் அதிரடி கைது..!!
20 people who violated 144 prohibitions were arrested in Kambam
தேனி மாவட்டம் கம்பன் நகராட்சி பகுதியில் அரிக்கொம்பன் யானை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் பொதுமக்களை விரட்டி வருகிறது. அரிக்கொம்பன் யானை தாக்கியதில் பால்ராஜ் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த யானை தாக்கியதில் தற்பொழுது வரை 18 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறி மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் கம்பம் பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
இதன் காரணமாக வருவாய்த் துறையினர், வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் யானை இருக்கும் பகுதியில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொது மக்களும் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்புத் திறந்தார். மேலும் பொள்ளாச்சியில் இருந்து இரண்டு கும்கி யானைகள் ஹரிகும்பனை பிடிக்க வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கம்பம் நகராட்சி பகுதியில் 144 தடை உத்தரவை மீறி அரிக்கொம்பன் யானை இருக்கும் பகுதிக்கு வந்த 20 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் யூடியூபர்கள் ட்ரோனை பறக்க விட்டு யானையை படம் பிடிப்பதால் அரிக்கொம்பன் யானை மிரண்டு போய் உள்ளது. யானைக்கு அருகே பறந்த ட்ரோனால் மிரண்டு போய் புளியந்தோப்பில் இருந்து வெளியேறி வாழை தோப்பிற்குள் புகுந்துள்ளது. 144 தடை உத்தரவை மீறி அப்பகுதிக்குச் சென்ற யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் யானை இருக்கும் பகுதிக்கு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் அரிக்கொம்பன் யானை பிடிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேகமலை புலிகள் காப்பக முதன்மை வனப் பாதுகாவலர், கள இயக்குநர் தலைமையில் சிறப்பு குழு அமைத்து முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
English Summary
20 people who violated 144 prohibitions were arrested in Kambam