மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! 3 வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில்.!
20 years in prison for 3 youths who sexually harassing a mentally retarded girl in virudhunagar
விருதுநகர் மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மூன்று வாலிபர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர்கள் விக்னேஷ் (20), அலெக்ஸ் பாண்டியன் (23) மணிகண்ட ராஜா(24). நண்பர்களான இவர்கள் மூன்று பேரும் கடந்த வருடம் மனவளர்ச்சி குன்றிய 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிவகாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் இவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனவளர்ச்சி குன்றிய 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மூன்று பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமைக்கு அரசு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.
English Summary
20 years in prison for 3 youths who sexually harassing a mentally retarded girl in virudhunagar