சேலம் அருகே பரபரப்பு... நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த 22 வயது இளைஞர் கைது..!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தை அடுத்த கெங்கவல்லி அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சீனி. இவருடைய மகன் சிவா (வயது 22) வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக இரண்டு நாட்டு துப்பாக்கிகளை வைத்திருப்பதாக கெங்கவல்லி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் சிவாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் சிவா வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார். மேலும் காவல்துறையினர் வருவதை  அறிந்த சிவா திருடன் நாட்டு துப்பாக்கிகளையும் எட்டிமடத்து கருப்பசாமி கோயில் அருகே மண்ணில் புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சிவாவை அழைத்துச் சென்ற காவல்துறையினர் இரண்டு நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடுத்து ஆத்தூர் நீதிமன்றத்தில் சிவாவை ஆஜர்படுத்திய காவல்துறையினர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கெங்கவல்லி பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

22year old youth arrested for possessing country guns in salem


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->