அடுத்தடுத்து பரபரப்பு - தமிழகத்தில் மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்.! - Seithipunal
Seithipunal


இன்று தமிழ்நாடு முழுவதும் 15 துறைச் செயலர், 10 ஆட்சியர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இன்று இட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

* மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இயக்குநர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டு, அதன் இயக்குநராக கார்த்திகா நியமிக்கப்பட்டு உள்ளார்.

* முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இருந்த மோகன் ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* ஜவுளித்துறை இயக்குநராக ஜெயகாந்தன், இந்து சமய அறநிலை துறை ஆணையராக ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ் உள்ளிட்டோர் நியமனம் செய்யபட்டுள்ளனர்.

* டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கூடுதல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி அதிஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* அறநிலை துறை ஆணையராக இருந்த முரளிதரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட இயக்குநராகவும், மீன்வளத்துறை மேலாண் இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி கஜலட்சுமி பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளார்

* நெல்லை ஆணையர் தாக்கரே சுபம் ஞானதியோராவ் ஈரோடு வணிகவரி இணை ஆணையராகவும், சமூக சீர்திருத்தத்துறை செயலாளராக இருந்த ஆபிரகாம் தொழில்நுட்பக் கல்வி ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* போக்குவரத்து துறை ஆணையராக இருந்து சண்முகசுந்தரம் கைத்தறித்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* போக்குவரத்து துறை ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சுஞ்சோங்கம் ஜடக் சிரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* புதுக்கோட்டை ஆட்சியர் மெர்சி ரம்யா ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்ட ஆணையராகவும், கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* நாகை ஆட்சியராக இருந்த ஜானி டாம் வர்கீஸ் குழந்தை நலத்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒரே நாளில் நடைபெற்ற அடுத்தடுத்த பணியிட மாற்றத்தால் சக அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

25 ias officers posting change in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->