அதிமுக பிரமுகர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை! நகையை விற்று ஜாலியாக செலவு செய்த திருடன் கைது!! - Seithipunal
Seithipunal


ஆரணி : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி அதிமுக பிரமுகர்கள் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக மீனவர் அணி செயலாளர் உள்ளவர் ஆனந்தன். அவர் ஆரணி நகர் விஏகே நகரில் வசித்து வருகிறார். குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றதாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனந்தன் குடும்பத்தினர் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர் அன்று இரவு ஆனந்தன் வீட்டில் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். பின்னர் வீட்டின் அறையில் உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டு இருந்த நெக்லஸ், கம்பல், தோடு, செயின் வளையல், மோதிரம் 25 பவுன் நகைகளை திருடி தப்பிச் சென்றுள்ளார்.

 

`மறுநாள் அதிகாலை வீடு திரும்பிய ஆனந்தன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து பதில் வீட்டின் உள்ளே சென்று பாரதப் பொது அறையிலிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 25 பவுன் நகையை திருட்டப்பட்டுள்ளதை தெரிந்து கொள்கிறார். பின்னர் இதுகுறித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து வீட்டை ஆய்வு செய்து திருடனின் கைரேகைகளை வைத்து பழைய குற்றவாளிகள் பெயர் பட்டியலோடு ஒப்பிட்டு ஆய்வு செய்ததில் தென்மதுமங்கலத்தை சேர்ந்த ராமஜெயம் கைரேகையுடன் பொருந்தியதாக கூறப்படுகிறது.

பின்னர், குற்றவாளி ராமஜெயம் வேறொரு கொள்ளை சம்பவத்திற்காக சிறையில் இருப்பதை அறிந்தது நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று ஆரணி காவல் துறையினர் கஸ்டடி எடுத்து விசாரித்ததில் குற்றத்தை ராமஜெயம் ஒப்புகொண்டார். பின்னர் ராமஜெயம் குடுத்த தகவலில் 10 பவுன் நகைகளை காவல்துறை மீட்டனர். பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 25 பவுண் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

25 pounds jewelry stolen from house of AIADMK leader


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->