கடலூரில் பரபரப்பு! மதிய உணவில் பூரான்! 25 மாணவ,மாணவிகள் மயக்கம்! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பூரான் கிடந்த உணவை சாப்பிட்ட 25 மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வரகூர்ப்பேட்டையில் அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இங்கு நேற்று மதிய உணவு ஆக மாணவ மாணவிகளுக்கு சாம்பார் சாதம் வழங்கப்பட்டது. மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு மாணவரின் தட்டில் சாம்பார் சாதத்தில் உள்ளே பூரான் இருந்ததாக கூறப்படுகிறது.

இதை பார்த்து அதிர்ச்சடைந்த மாணவர் பூரணை எடுத்து அங்கிருந்து ஆசிரியர்களிடம் காண்பித்தார். இதற்கு இடையே சில மாணவ மாணவியர்களுக்கு லேசாக வயிற்றுவலி மயக்கம் ஏற்பட்டது.

இதனை அடுத்து அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த மற்ற மானவர்களையும் பள்ளி ஆசிரியர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். 25 மாணவ மாணவிகள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

25 students fainted after eating leftover food in a government school


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->