சென்னை மக்களே ரெடியா.. செம்மொழி பூங்காவில் இன்று முதல் உணவு திருவிழா.!
2days food festival in Chennai semmozhi park
சென்னை செம்மொழிப் பூங்காவில் இன்றும், நாளையும் உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.
சென்னையில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் அனைத்து விதமான உணவு வகைகளும் கிடைக்கிறது.
அதன் காரணமாக தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் தீவு திடல் மற்றும் ஒரு சில இடங்களில் உணவு திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான உணவுகளும் இடம்பெறும்.
இந்த நிலையில் சென்னை செம்மொழி பூங்காவில் இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் உணவுத் திருவிழா நடைபெறவுள்ளதாக திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழ்நாடு அரசு மற்றும் UNHCR & OfERR அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் சென்னை செம்மொழிப் பூங்காவில், வருகின்ற ஜூன் 24 மற்றும் 25 அன்று நடைபெறவிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழாவில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அழைக்கின்றோம்." என் தெரிவித்துள்ளார்.
English Summary
2days food festival in Chennai semmozhi park