#சென்னை || திருநங்கைகளிடம் பணம் பறித்த தமிழக போலீஸ் மூன்று பேர் பணியிடை நீக்கம்.! - Seithipunal
Seithipunal


சென்னை அசோக் நகரில் கடந்த 31-ம் தேதி நல்லிரவு 100 அடி சாலையில் சிலர் ரகளையில் ஈடுபட்டுள்ளதாக திருநங்கைகள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அசோக் நகரில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

திருநங்கைகள் மற்றும் அங்கிருந்த வாலிபரிடம் கே.கே நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவல்துறையினர்கள் முருகன், மாரிமுத்து, நாராயணன், மணிகண்டன், பாண்டியன் மற்றும் குமரன் நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஏட்டு சசிகுமார் ஆகியோர் பணம் கேட்டு மிரட்டி ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், உடனடியாக இவர்கள் 6 பேரும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனையடுத்து துறை ரீதியாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநங்கைகளிடம் பணம் பறித்த காவல்துறையினர் சசிகுமார், முருகன், பாண்டியன் ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 Chennai Police suspend


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->