இளம்பெண் மர்ம மரணம்! சாதி சண்டை! தீ வைப்பு சம்பவம் எதிரொலி.. 3 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்..!!
3 DSPs transferred due to Jederpalayam arson incident
நாமக்கல் மாவட்டம், கரப்பாளையத்தில் கடந்த மார்ச் 11ஆம் தேதி இளம் பெண் ஒருவர் ஆடு மேய்க்க சென்றபோது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இதில், 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில், காவல் துறையினர் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்று ஒரு சமூகத்தினர் (சாதியினர்) போராட்டம் நடத்த, மற்றொரு சமூகத்தினர் எதிர்க்க, ஒரு கட்டத்தில் இரு சமூகத்தினரிடையே மோதலாக வெடித்தது.
இதனை தொடர்ந்து, இரு சமூகத்தினர் நடத்தும் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை மற்றும் கொட்டகையில் தங்கியிருக்கும் வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கி இருக்கும் குடியிருப்புகள் மற்றும் டிராக்டர்களுக்கு தீ வைப்பு சம்பவமும், ஒருவர் பலியான கொடூரமும் அரங்கேறியது.
இந்த நிலையில், இளம்பெண் மர்ம மரணம், சாதி சண்டை, ஜேடர்பாளையம் தீ வைப்பு சம்பவம், வடமாநில தொழிலாளி படுகொலை உள்ளிட்ட தொடர் சம்பவங்களால் நாமக்கல்லில் பணிபுரிந்து வந்த டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி நாமக்கல் டிஎஸ்பியாக பணியாற்றி சுரேஷ் விழுப்புரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பரமத்தி வேலூர் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த கலையரசன் தாராபுரத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதே போன்று திருச்செங்கோடு டிஎஸ்பியாக பணியாற்றி வந்த மகாலட்சுமி பென்னாகரத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் நாமக்கல் டிஎஸ்பியாக தனராசு, பரமத்திவேலூர் டிஎஸ்பியாக ராஜ முரளி, திருச்செங்கோடு டிஎஸ்பியாக இமயவர்மன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
3 DSPs transferred due to Jederpalayam arson incident