காந்தி ஜெயந்தி நாளில்.. தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்! களமிறங்கியது 3 தனிப்படை! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் என்பவர் எட்டி உதைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேள்வி கேட்ட விவசாயி எட்டி உதைத்த ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததை அடுத்து அவரை பணியிட நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி நேற்று உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து ஊராட்சி செயலர் தங்கபாண்டியின் மீது போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் திடீரென தங்கபாண்டியன் தலைமறைவானார். இந்த நிலையில் ஊராட்சி செயலர் தங்கபாண்டியினை பிடிக்க விருதுநகர் மாவட்ட போலீசார் 3 தனி படைகளை அமைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 police teams formed to catch panchayat secretary who kicked farmer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->