தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு.. குற்றவாளியுடன் தொடர்பில் இருந்த காவலர்கள் பணியிட மாற்றம்.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த நிலையில் மணல் கடத்தலை தடுத்ததாக கடந்த ஏப்ரல் 26ம் தேதி 2 பேர் கொண்ட மர்ம நபர்களால் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அதிகாரிகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் ராமசுப்பிரமணியன் , மாரிமுத்து ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் அய்கோ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் கொல்லப்பட்டதற்கு முன்பாக மணல் கடத்தல் புகாருக்குள்ளான ராமசுப்பிரமணியம் முறப்பநாடு காவல் நிலையத்துக்கு சென்று அங்குள்ள காவலர்களுக்கு தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். 

ஆனால் கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் வழக்கு பதிவு செய்திருப்பதாக காவல்துறையினர் கூறியதால் ஆத்திரத்தில் காவல் நிலையத்தில் இருந்து சற்று தூரத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று லூர்து பிரான்சிசை வெட்டி படுகொலை செய்துள்ளனர்" என அந்த மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டு அரசு அலுவலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் அரசு அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக உரிமத்துடன் கூடிய கை துப்பாக்கி வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக தென்மண்டல காவல் கண்காணிப்பாளர் சுரேஷை விசாரணை அதிகாரியாக நியமனம் செய்து தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவு பிறப்பித்து இருந்தார். காவல்துறையினர் தொடர்புடையதாக சந்தேகம் எழுந்ததன் காரணமாக விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டார்.

இவர் மேற்கொண்ட விசாரணையில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்படுவதற்கு முன்பு குற்றவாளியான ராமசுப்பிரமணியன் உடன் காவலர்கள் உரையாடியதற்கான ஆதாரங்கள் சிக்கியது. இதன் காரணமாக கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுடன் தொடர்பு இருந்த காரணத்திற்காக தலைமை காவலர் சரவணன், தனிப்பிரிவு காவலர் மகாலிங்கம், உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 police transferred in Tuticorin VAO murder case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->