தமிழ்நாட்டில் புதிதாக 3 புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகள் - மத்திய அரசு அனுமதி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் புதிதாக 3 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் 30 அரசு மற்றும் 20 தனியார் என மொத்தம் 50 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் இதற்கான மாணவ சேர்க்கை நடப்பாண்டு கல்வியாண்டிலேயே தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்லூரிகள் மூலம் நாடு முழுவதும் 8,195 இடங்கள் நிரப்ப பட உள்ளது. மேலும் நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 1,07,658 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

அதேபோல் சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தர்மபுரி ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும் அதற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 private medical colleges approved to central government


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->