வாடகை படகில் பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தல்! 80 பண்டல்களில் 2689 கிலோ பீடி இலைகள் பறிமுதல்! - Seithipunal
Seithipunal


தமிழகத்திலிருந்து படகின் மூலம் பீடி இலைகளை இலங்கைக்கு கடத்திச் சென்ற 3 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்தவர்  கௌதம். இனிகோ நகரை சேர்ந்தவர் புரோசஸ். இவர்கள் இருவரும் சொந்தமான பைபர் படகு உள்ளது. இவர்கள் இருவரும் மீன்களை ஏலம் எடுத்து வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், இவர்களின் பைபர் படகுகளை வாடகைக்கு எடுத்துச்சென்று தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்களான தேசுராஜ், இந்திரா நகரை சேர்ந்த ராஜு, ஆகியோர் பீடி இலைகளை பண்டல் பண்டலாக படகில் ஏற்றிக்கொண்டு கடந்த 11ஆம் தேதி இலங்கை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.

நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்  இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி பைபர் படகை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் படகுகளில் ஏறி சோதனை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்தப் படகில் சோதனை நடத்திய போது படகில் 80 பண்டல்களில் 2689 கிலோ பீடி இலைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த இலங்கை கடற்படையினர் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர், படகில் இருந்த 3 தமிழக மீனவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். கடத்தலுக்கு பயன்படுத்திய படகு மற்றும் பீடி இலைபண்டல்களையும் பறிமுதல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 Tamil Nadu fishermen arrested for smuggling beedi leaves to Sri Lanka from Tamil Nadu by boat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->