அரியலூர்: பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 இளைஞர்கள்... சிறையில் அடைத்த போலீசார்..! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரியலூர் மாவட்டம் கல்லாத்தூர் தண்டலை பகுதியைச் சேர்ந்தவர் 35 வயது பெண். இவர் கிராமத்துக்கு மத்தியில் உள்ள ஏரியில் தனியாக குளித்துள்ளார். மேலும் இந்த ஏரியில் அந்த பகுதியை சேர்ந்த அனைவரும் குளிப்பது வழக்கம். இந்நிலையில் 35 வயது பெண் தனியாக குளித்துக் கொண்டிருந்ததை, ஏரிக்கரை புதருக்குள் மறைந்து இருந்து மூன்று இளைஞர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

இதைப்பார்த்த பெண் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டு உள்ளார். அதனால் இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (23),vதினேஷ் (21), விமல் (19 ஆகிய மூன்று இளைஞர்களை பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்களது செல்போன்களை கைப்பற்றிய ஆய்வு செய்ததில், பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது தெரிய வந்தது. இந்நிலையில் மூன்று பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 youths jailed for taking video of woman bathing in Ariyalur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->