மாநகர பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை கத்தியால் வெட்டிய 3 இளைஞர்கள்.! - Seithipunal
Seithipunal


வண்ணாரப்பேட்டையில் மாநகர பேருந்தை வழி மறித்து ஓட்டுநரை கத்தியால் வெட்டிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொண்டித்தோப்பு காவல் குடியிருப்பை சேர்ந்தவர் விஜில் ராஜ் (44). இவர் சென்னை மாநகரப் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து மணலி நோக்கி விஜில்ராஜ் பேருந்தை ஓட்டி சென்றார். அப்பொழுது வண்ணாரப்பேட்டை சிமெண்ட்ரி சாலை அருகே சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் பேருந்தை முந்தி சொல்ல முயன்றுள்ளனர்.

அப்பொழுது ஓட்டுநர் விஜில் ராஜ் அவர்களுக்கு வழி விடவில்லை என்பதால் ஆத்திரமடைந்த அவர்கள் பஸ்ஸை வழிமறித்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கத்தியால் விஜில் ராஜை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதையடுத்து பலத்த காயமடைந்த விஜில் ராஜை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், மாநகர பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை கத்தியால் வெட்டிய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த பாபு, பரத் மற்றும் ஹரிஷ் குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 youths who hijacked a bus and cut the driver with a knife in chennai vannarapettai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->