ஸ்தம்பித்த சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை.. நள்ளிரவில் போராட்டத்தில் குதித்த 3 ஆயிரம் பெண்கள்.!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், இருங்காட்டுகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. அதிக அளவில் தொழிற்சாலைகள் ஒரே பகுதியில் இருப்பதால், அந்த மாவட்டங்கள் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் ஆண்கள், பெண்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். 

பல தொழிற்சாலைகள் ஊழியர்களை தங்கள் சொந்த விடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து அங்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தருவதுண்டு. இந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் 5000 க்கும் மேற்பட்ட பெண்கள் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பூந்தமல்லியில் உள்ள பகுதியில் தங்கும் விடுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர். 

கடந்த புதன்கிழமை விடுதியில் தயாரிக்கப்பட்ட உணவு தரமற்ற முறையில் இருந்ததால், பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. விடுதியில் தங்கி இருந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் உடல்நலம் குறைவால் அருகிலிருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். பெரும்பாலானவர்கள்  இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் இருந்து நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையான உணவு அளிக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பெண்கள் குறித்த நிலை சம்பந்தப்பட்ட விடுதி நிர்வாகம் தெரிவிக்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் உடல்நிலை குறித்து நிர்வாகத்திடம் சக ஊழியர்கள் கேள்வி எழுப்பிய போதும் மழுப்பலான பதில்களை தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகு நிர்வாகம் முறையான தகவல் தெரிவிக்காததால், எட்டு நபர்கள் உயிரிழந்து  இருப்பார்கள் என சந்தேகம் எழுந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். 

இதையடுத்து, சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விடுதியில் இருந்த பெண் ஊழியர்கள் அனைவரும் வெளியேறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஸ்தம்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3000 girls protest in chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->