வடகிழக்கு பருவமழையால் சதம் அடித்த 38 ஏரிகள்! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவமழை தொடங்கி இரண்டு நாட்களே ஆன நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 38 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதேபோன்று சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள பெரும்பாலான ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. சென்னையின் குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளான பூண்டி நீர் தேக்கம், சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய முக்கிய நீர் தேக்கங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொன்னேரி ஆவடி பகுதிகள் பலத்த சேதம் அடைந்தன. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் 133 இடங்கள் சேதம் அடைந்த பகுதிகளாக கண்டறியப்பட்டு இந்த ஆண்டும் பொதுப்பணித்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் கூறுகையில் "சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் அளவு குறைவாக உள்ளதால் வெள்ளப்பெருக்கால் ஏற்படும் நீர்வரத்தை தேக்கி வைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகமாக இருந்தாலும் வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாகவே இருக்கும். இதனால் கடந்த ஆண்டை போல் பாதிப்பு ஏற்படாத வண்ணம் கையாளப்படும்" என தெரிவித்துள்ளார்.

தற்பொழுது பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,155 ஏரிகளில் 38 ஏரிகள் 100% நிரம்பியுள்ளது. 136 ஏரிகளில் 75 சதவீதமும் 27 ஏரிகளில் 50 சதவீதமும் மற்ற ஏரிகளின் அதற்கு குறைவாகவும் நீர் நிரம்பி உள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

38 lakes completely filled with northeast monsoon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->