தடுப்பு சுவர் மீது மோதிய ஆம்னி பஸ்... புதுமாப்பிள்ளை உள்ளிட்ட மூவர் பலி..! - Seithipunal
Seithipunal


ஆம்னி பஸ் விபத்துக்குள்ளானதில் புதுமாப்பிள்ளை உள்ளிட்ட மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், வடச்சேரி பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்னி பஸ் கயத்தார் அடுத்த அரங்குளம் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தது.  அப்போது திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் உள்ள தடுப்பு சுவரில்மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒட்டுநர், பேருந்தில் பயணித்த பயணிகள் உள்ளிட்ட மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விபத்து குறித்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3persons Death in Accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->