₹10 நாணயம் வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை.!!
3yeats jailed refuse to buy rs10 coins
இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் இந்திய தண்டனைச் சட்டம் 124 கீழ் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியில் உள்ள செய்தி குறிப்பில் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் இருந்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிவிப்புகளை வழங்கி உள்ள நிலையில் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என பல கிராமங்களில் மக்கள் மற்றும் சிறு கடைகளில் வாங்க மறுப்பு தெரிவிக்கின்றனர்.
இந்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும். இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள 14 வகையான 10 ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கது. எனவே பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதும் தண்டனைக்குரிய குற்றம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
3yeats jailed refuse to buy rs10 coins