மின்கட்டணம் செலுத்தவில்லை என செல்போனுக்கு வந்த லிங்க் - பறிபோன 4½ லட்சம்..!
4 1/2 lakhs money fraud for no pay electricity bill in chennai
தற்போது ஆன்லைன் மூலமாக ஏதாவது ஒரு வழியில் பணம் பறிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், மின்கட்டணம் செலுத்தவில்லை என்று ஏமாற்றி லிங்க் அனுப்பி ரூ.4½ லட்சம் பணம் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள கோட்டூர் கார்டன் பகுதியை சேர்ந்த ராஜசேகரன் என்பவரின் செல்போனுக்கு லிங்க் ஒன்று வந்துள்ளது. அதில் நீங்கள் மின் கட்டணம் செலுத்தாமல் இருக்கிறீர்கள்.
அதனால் உங்களது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனை தவிர்க்க லிங்கில் சென்று மின் கட்டணத்தை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தகவலை உண்மை என்று நம்பிய ராஜசேகரன் லிங்கின் உள்ளேச் சென்று பார்த்துள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே ராஜசேகரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜசேகரன் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரின் படி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
English Summary
4 1/2 lakhs money fraud for no pay electricity bill in chennai