பழுதாகி நின்ற அரசு பேருந்து.! மாணவிகளை தள்ள வைத்த 4 பேரும் சஸ்பெண்ட்!
4 people suspended for students pushed govt bus
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து தனியார் கல்லூரி மாணவிகளுடன் 36M என்ற தடம் எண் கொண்ட அரசு பேருந்து புறப்பட்டுச் சென்றது. அந்த அரசு பேருந்து பழைய தாலுகா அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென பழுதாகி பாதி வழியில் நின்றது.
பேருந்தில் இருந்த கல்லூரி மாணவிகள் கல்லூரிக்கு செல்ல நேரமானதால் உடனே பேருந்தில் இருந்து கீழிறங்கி பேருந்தைத் தள்ள தொடங்கினர். சிறிது தூரம் தள்ளிய பிறகு பேருந்து இயங்க ஆரம்பித்ததால் மீண்டும் பேருந்து நிலைய கல்லூரி மாணவிகள் பயணம் மேற்கொண்டனர்.
இதனை கண்ட அங்கிருந்த சிலர் தங்களின் செல்போனில் வீடியோ இடத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு போக்குவரத்து கழகமும் கடும் விமர்சனத்திற்கு ஆளான நிலையில் நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உள்ளிட்ட 4 பேர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து கன்னியாகுமரி போக்குவரத்து கழக பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
4 people suspended for students pushed govt bus