#கும்பகோணம் || அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய 4 பேர் கைது.!! - Seithipunal
Seithipunal


நேற்று இரவு கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து பழைய பாலக்கரை அருகே வந்து கொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசலால் நின்றது. அப்போது பேருந்தை நகர்த்துமாறு சிலர் கூற போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் நகர்த்த முடியாது என பணியில் இருந்த ஓட்டுனரும் நடத்துனரும் கூறியுள்ளனர். 

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் பேருந்துக்குள் சென்று ஓட்டுநர் மற்றும் நடத்துனரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஓட்டுநர் ராஜேஷ் மற்றும் நடத்துனர் செந்தில்குமார் ஆகியோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது. தாக்குதலுக்கு ஆளான தனியார் ஊடக செய்தியாளர்களும் அதே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 

இது குறித்து வழக்கு பதிவு செய்த கும்பகோணம் கிழக்கு போலீசார் காமராஜர் நகரை சேர்ந்த சுதர்சன் உதயகுமார், பாலாஜி நகரை சேர்ந்த ஜனார்த்தன் சக்திவேல் ஆகிய இருவரையும் என மொத்தம் நான்கு கல்லூரி மாணவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 person arrested for attack on govt bus driverin Kumbakonam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->