#செங்கல்பட்டு || கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்பொழுது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த, கோவூரை பசேர்ந்த மனோ(30), மவுலிவாக்கத்தை சேர்ந்த ராஜீவ் சர்மா(29), கொரட்டூரை சேர்ந்த கிறிஸ்டோபர்(20) மற்றும் அயனாவரத்தை சேர்ந்த பாபு (37) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்த 850 கிராம் திரவ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 person arrested for Cannabis selling in Chengalpattu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->