கடலூர் அருகே சோகம்.. டூத் பேஸ்ட் என்று நினைத்து எலி மருந்தை சாப்பிட 4 குழந்தைகள்..!
4 small kids eaten rat killer paste in cuddalore district
கடலூர்மாவட்டத்தின் விருதாச்சலம் அருகே உள்ள கொட்டாரக்குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு அனுஷ்கா (3), பாலமித்திரன் (2) என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் மணிகண்டனுக்கு அறிவழகி என்று ஒரு தங்கை உள்ளார்.
மேலும் அறிவழகிக்கு லாவண்யா (5), ராஷ்மிதா (2) என்ற இரு பெண்குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மணிகண்டன் மற்றும் அவரது தங்கை அறிவழகி இருவரது 4 குழந்தைகளும் வீட்டில் உள்ள எலி மருந்து பேஸ்ட்டை டூத் பேஸ்ட் என்று தவறுதலாக நினைத்து சாப்பிட்டுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக இந்நிகழ்வைப் பார்த்துவிட்ட குடும்பத்தினர் அக்குழந்தைகளை உடனடியாக அருகிலுள்ள விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து அங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நால்வரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அக்குழந்தைகள் நலமுடன் இருந்தாலும், மேலும் மூன்று நாட்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து தொடர் சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
English Summary
4 small kids eaten rat killer paste in cuddalore district