பெரும் சோகம்.. பேருந்து படியில் பயணித்த 4 மாணவர்கள் பலி.!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுநாகலூர் என்ற இடத்தில் தனியார் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிப்படி கல்லூரி மாணவர்கள் பயணம் செய்துள்ளனர்.

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் பேருந்து உரசியதில் 3 மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் மருத்துவமனையில் பலி.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 5க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்ட போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 students died in chengalpattu road accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->