பெரும் சோகம்! மீண்டும் ஒரு நாய்க்கடி உயிரிழப்பு! ரேபிஸ் நோய் தாக்கம் தீவிரம்! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே வெறி நாய் கடித்து குதறியதில் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து நாய்க்கடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை நாய்கள் கடித்து  250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. அது மட்டுமல்லாமல் நாய்க்கடியால் பலருக்கும் ரேபிஸ் நோய் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஜூன் 27ஆம் தேதி  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தில் நிர்மல் என்ற சிறுவன் வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்து தெரு நாய் ஒன்று  சிறுவனை துரத்தி துரத்தி கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ரேபிஸ்  நோய் தாக்கிய சிறுவன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரேபிஸ் நோயின் தாக்கம் தீவிரம் அடைந்து சிறுவன் நிர்மல் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறுவனின் உடல் அமரர் ஊர்தில் இரவில் வீட்டுக்கு எடுத்து வராமல் நேரடியாக சுடுகாட்டுக்கு சென்று இறுதி சடங்குகள் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நாய் கடி சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், தற்போது அரக்கோணம் அருகே 4 வயது சிறுவனை நாய் கடிதத்தில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 year old boy died after being bitten by a rabid dog near Arakkonam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->