பெருந்துறை அருகே தடை செய்யப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல்!
400 kg Gutka seized near Perundurai
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தடை செய்யப்பட்ட 400 கிலோ குட்கா போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் பெருந்துறை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அந்தக் காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பாக்குகள் மூட்டை மூட்டையாக அடிக்க வைத்திருப்பது தெரிய வந்து காவல்துறை அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இது குறித்து காரை ஓட்டி வந்த ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புனாமா ராம் சவுத்ரி என்பதும் தற்போது இவர் திருபுற மாவட்டம் அவிநாசியில் தங்கி இருப்பதும் தெரிய வந்ததுள்ளது.
அவிநாசி மற்றும் திருப்பூரில் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள மளிகை கடைகள் பெட்டி கடைகளுக்கு நேரடியாக போதையிலை மற்றும் போதை பார்க்க பொட்டலங்களை விநியோகம் செய்து வருவதை தொழிலாக வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
அதனை எடுத்து அவர் கொண்டு வந்த நான் ஒரு கிலோ எடை கொண்ட ரூ. 3.22 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் போதை இலை பொருட்களை காரையும் போலீசார் பதிவுகள் செய்து புனாமா ராம் சவுத்ரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
400 kg Gutka seized near Perundurai