மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் 4 பேர் கைது!
4people arrested in Madambakkam Panchayat President murder case
சென்னை தாம்பரத்தை அடுத்த படப்பை அருகே உள்ள மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த வெங்கடேசன் மற்றும் அதே பகுதியில் மூன்றாவது வார்டு உறுப்பினராக இருந்த சத்யா உடன் நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் மாடம்பாக்கம் ராகவேந்திரா நகர் பகுதியில் உள்ள பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அவர்களை மூன்று இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து வந்த ஒன்பது பேர் கொண்ட கும்பல் அவர்கள் மீது நாட்டு வெடி குண்டு வீசி கொலை செய்ய முயற்சி செய்தனர். அதிலிருந்து தப்பி ஓடிய வெங்கடேசனை துரத்திச் சென்ற ஒன்பது பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. இதனால் வெங்கடேசன் சம்பவத்தை இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து தாம்பரம் காவல் ஆணையர் அமுல்ராஜ் உத்தரவின் பெயரில் துணை ஆணையர் சிபிசக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விடிய விடிய நடத்தப்பட்ட வாகன சோதனையில் கொலையாளிகள் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இரட்டை கொலைக்கு பழி வாங்க வெங்கடேசனை வெட்டி கொன்றதாக தெரிவித்துள்ளனர். மீதமுள்ள ஐந்து பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
4people arrested in Madambakkam Panchayat President murder case