சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்பு..!!
5 additional judges of ChennaiHC appointed as permanent Jjudges
சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவி ஏற்று கொண்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த ஸ்ரீமதி, பரதசக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷபிக், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் இன்று நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர்.
![](https://img.seithipunal.com/media/HC.jpeg)
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா ஐந்து கூடுதல் நீதிபதிகளுக்கும் நிரந்தர நீதிபதிகளாக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இன்று பதவியேற்று கொண்ட ஐந்து நீதிபதிகளும் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டனர்.
![](https://img.seithipunal.com/media/SupremeCourt Of India-cgdsm.jpg)
இதனைத் தொடர்ந்து கூடுதல் நீதிபதிகளாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஐந்து பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஐந்து கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவி ஏற்று கொண்டனர்.
English Summary
5 additional judges of ChennaiHC appointed as permanent Jjudges