அதிகாலையிலேயே... தமிழகம் முழுவதும் சோகம்.!! கோர விபத்தில் 5 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்டை ஏற்றுக்கொண்டு சென்று கொண்டிருந்த  லாரி ஒன்று நமணசமுத்திரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாது. அப்போது தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கடையில் கூட்டமாக ஒரே இடத்தில் அமர்ந்திருந்த ஐயப்ப பக்தர்கள் மீது மோதியதில் பயங்கரமான விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 வயது சிறுமி உட்பட 19 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுரித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சோழரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பாலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 died in Pudukottai road accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->